துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 2026- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப் பேரணி துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புறப்பட்டு பேருந்து நிலையம் வழியாக மீண்டும் வட்டாட்சியர் அலுவலகம் வந்து நிறைவு பெற்றது இதில் திருச்சி மாவட்ட மாற்று திறனாளிகள் துறை பணியாளர்கள் தேர்தல் திருவிழா நாட்டின் பெருவிழா அனைவரும் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூன்களை கையில் ஏந்தியவாறு துறையூர் நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் ,தேர்தல் தனி வட்டாட்சியர் ராஜவேல், தமிழ்நாடு உரிமைகள் திட்ட பணியாளர் டாக்டர் ஞானராஜ், திறன் வளர்ப்பு பயிற்சியாளர் எஸ்தர், தேர்தல் நடத்தும் அலுவலரின் உதவியாளர் பன்னீர்செல்வம்(வருவாய் ஆய்வாளர்) மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலக பணியாளர்கள், மாற்று திறனாளிகள், பெற்றோர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *