தூத்துக்குடியில் தவெக விஜய் கட்சியிலிருந்து 200 போ் விலகி முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்


தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் போட்டியிடுகிறாா். தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் ஸ்டே்பாங்க் காலணியில் வைத்து தமிழக வெற்றிக்கழக தலைமை செயற்குழு உறுப்பினா் கௌதம் பாண்டியன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தீனதயாளன் தூத்துக்குடி புறநகா் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிாிவு அமைப்பாளர் முனீஸ்வரன், உள்பட 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வெற்றிக்கழகத்திலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும் அதிமுக நகர செயலாளரும் வேட்பாளருமான சித.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

அனைவரையும் வரவேற்று சால்வைஅணிவித்து முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் கூறுகையில் அதிமுக என்ற கட்சியை எம்.ஜி.ஆர்் தொடங்கி ஜெயலலிதா எடப்பாடியாா் என்ற தலைமுறைவரை 54 ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்காக செயல்பட்ட திறமையான நிா்வாகத்தின் மூலம் எம்.ஜி,ஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோா் முதலமைச்சராக பணியாற்றி நாட்டு மக்களுக்கு செய்த நல்லதிட்டங்களால் வரை தமிழகத்தில் உள்ள மக்கள் எம்.ஜிஆரையும் ஜெயலலிதாவையும் இன்று வரை தெய்வமாக நினைத்து வருகின்றனா்.

திரைப்படத்தில் முதல்வராக நடிக்கலாம் கனவும் காணலாம் ஆனால் அது எல்லோருக்கும் தமிழகத்தில் முதல்வா் என்ற கனவு பொருந்தாது தடம் மாறி சென்ற நீங்கள் சாியான இடத்திற்கு வந்துள்ளீா்கள் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைவதற்கு அனைவரும் முழுமைாயக உழைக்க வேண்டும் அதற்கேற்ற பலன் வரும் காலங்களில் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறினாா்.


நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சந்தனபட்டு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் ஜோதிமணி, இலக்கிய அணி இணைச்செயலாளா் பொற்கிளி ஜான்சன் தேவராஜ், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், காங்கிரஸ் மாநில ஓபிசி அணி துணைத்தலைவா் விவேகம்ரமேஷ், மண்டல செயலாளர் ஜெயரூபி, முன்னாள் வட்டச்செயலாளர் திருமணி, உள்பட அதிமுக பிஜேபி கட்சியை சேர்ந்த நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *