வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வரை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, கரூர், நாமக்கல், மதுரை ஆகிய இடங்களில் நேற்று வெயில் சதம் அடித்துள்ளது. திருச்சியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், அதிகபட்சமாக கரூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மண்னை
க.மாரிமுத்து.