பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்திட அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்யுங்கள் நடிகை கவுதமி தேர்தல் பிரசாரம்

தர்மபுரி, ஏப்.18-நேற்று தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி அ.தி.மு.க.வேட்பா ளர் மரகதம் வெற்றிவேலை ஆதரித்து நடிகை கவுதமி கிருஷ்ணாபுரம், கடத்தூர், டத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் தேர்தல் பிரசாரம் மேற் கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


அப்போது நடிகை கவுதமி பேசுகையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரு வருகிறது. பெண் குழந்தைகள் முதல்
வயதான பெண்கள் வரை இந்த ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். எங்கு பார்த்தாலும் பார்த்தாலும் போதை கலாசாரம் தலைவிரித்து ஆடுகிறது. இதுபற்றி கவலைப்படாத தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பாலியல் வன்கொடுமைகள் | மற்றும் போதை கலாசாரத் திற்கு முடிவு கட்டவும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.ஆட்சிக்கு வர வேண்டும். பாப்பிரெட் டிப்பட்டி தொகுதியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று இந்த நிகழ்ச்சியில் கவுதமி பேசினார் இந்நிகழ்ச்சியில்
தொகுதி பொறுப்பாளர் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.வெற்றிவேல், நகர செய லாளர்கள் சந்தோஷ், தென்னரசு, பா.ம.க. மாவட்ட செயலாளர் செயலாளர் இரா.அரசாங் கம், மாநில இளைஞர் சங்க செயலாளர் செந்தில், ஒன் றிய செயலாளர் சின்னத் தம்பி, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்
பெரியசாமி, பா.ஜனதா முன்னாள் மாவட்ட தலை வர் பாஸ்கர், மாநில செயற் குழு உறுப்பினர் வரதராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன்இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *