ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் முனைவர் P.பழனியப்பன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதிலிருந்து பல்வேறு கிராமங்களில் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக துறிஞ்சிப்பட்டி கிராமத்திற்கு வருகை தந்த அவரை, ஊர் பொதுமக்கள் மேளம், தாளம் முழங்க உற்சாகமாக வரவேற்றனர்.பட்டாசுகள் வெடித்து, பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

“நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்… எங்கள் வாக்கு உதயசூரியனுக்கே!” என்று முழக்கமிட்டு,கிராம மக்கள் தங்களது முழு ஆதரவையும் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வு தேர்தல் களத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மக்களிடையே நல்ல பெயரும் நம்பிக்கையும் பெற்றுள்ள முனைவர் P.பழனியப்பன் அவர்களின் வெற்றி உறுதி என்ற நம்பிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது. இதனால் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுகவிற்கு சாதகமான நிலையாக மாறி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *