தாம்பரம் மாநகராட்சி 62வது வட்டப் பகுதியில், தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் நடைபயணமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பகுதி முழுவதும் அவர், பொதுமக்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.இந்த வாக்கு சேகரிப்பு வட்ட கழக செயலாளர் எம்.வசந்த் ஏற்பாட்டில் செல்லியம்மன் கோயில் தெருவில் வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாகக் கூடிவந்து உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.