மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சியின் வேட்பாள ராக நடிகர் சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வீதி வீதியாக சென்று சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். மகபூபாபாளையம், எஸ்.எஸ்.காலனி, தாமஸ் காலனி உள்ளிட்டபல் வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:- 30ஆண்டுகாலமாக வெளிநாடுகளில் வசித்து விட்டு, குடும்ப பின்னணியை மட்டுமே வைத்துக்கொண்டு 2016 தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் தான் உண்மையில் வெளியூர்காரர்.
நானாவது வெளியூர், அவர் வெளிநாட்டிலிருந்து நேரடி யாகவந்து இங்கு போட்டியிட்டார். 5 ஆண்டு காலமாக, அடிப்படை வசதிகளை செய்து தராமல்,தற்போது அவசர, அவசரமாக அனைத்தையும் சரி செய்கிறார்கள். என் னைப் பற்றி பேசும் அவர் மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து இதுவரை பேசவே இல்லை. மதுரை போன்ற
மோசமான சாலை எங்கேயும் கிடையாது. மாநகராட்சியில் மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் இல்லை. நான் வெற்றி பெற்ற வுடன் 3 மாதங்களுக்குள் மத்திய தொகுதி முழுவதும், சிறிய சந்து முதல் அனைத்து வீதிகளிலும் தெருவிளக்குகளும், சி. சி.டி.வி. கேமராக்களும் வைக்கப்படும். அறிவாளி என்று கூறும் அமைச்சரின் பதவிகளை ஏன் முதல்-அமைச்சர் கீழே இறக்கி கொண்டே வருகிறார்.
நிதி அமைச்சர் பதவி மாற்றப்பட்டது. ஐ.டி. விங்க் பொறுப்பு பறிக்கப்பட்டது. என்னை சினிமா சங்கி, கூத்தாடி என்று கூறும் இவர், அவ ருக்கு பிரசாரம் செய்ய வெளி மாநிலத்திலிருந்து எனது நண்பர் நடிகர் பிரகாஷ்ராஜை கூட்டி வந்து பேச வைக்கிறார். கட்சியில் இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. முதல்-அமைச்சர் முன்னிலை யிலேயே போதை கலாசாரம், கற்பழிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை இருக்கிறது என தைரியமாக பிரேமலதா கூறுகிறார், என பேசினார்.’