தஞ்சாவூர் ஆராதனா நாட்டிய பள்ளியில் பத்தாம் ஆண்டு விழாவில் ஆடிட்டர் ரவிச்சந்திரன் அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரதநாட்டியம் கலை மற்றும் நடனம் பற்றியும் மாணவர்களின பெற்றோர்களுக்கு வழிகாட்டும் வகையில் சிறப்புரையாற்றினார்.
ஆராதனா நாட்டியாலயா பள்ளியை வாழ்த்தி பாராட்டினார். நாட்டிய பள்ளிநிறுவனர் காஞ்சனா ரமேஷ் ராகவ் மற்றும் ஆடிட்டர் ரமேஷ் ராகவ் ஆகியோரை பாராட்டி நன்றி தெரிவித்தார்
பிறகு பரதநாட்டியத்தில் சிறப்பாக பயிற்சி செய்த அனைத்து மாணவிகளுக்கும் இந்த ஆண்டு விழாவில் சிறப்பாக நடனமாடிய அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை ஆடிட்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார்