திருவாரூர்., ஏப்ரல்.23
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற பொது தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் ஏராளமான இளைஞர்கள் பொதுமக்கள் முதியவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கோவி. சந்துரு என்று அழைக்கப்படும் சந்திரசேகரன் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.