முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பெரிய அளவு படத்தை வைத்த சட்டமன்ற உறுப்பினர் பதிலுக்கு அம்பேத்கார் அறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா காமராஜர் கருணாநிதி மு க ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி என தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் புகைப்படங்களை வைத்து மிகவும் கலகலப்பாக நடந்தது
சென்னை மணலியில் சென்னை மாநகராட்சி மண்டலம் இரண்டாவது மண்டலத்தில் மாதாந்திர மண்டல குழு கூட்டம் கடந்த முறை முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் புகைப்படங்களை வைத்ததால் மண்டல குழு தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் மறு தேதி அறிவித்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளியிடப்பு செய்த நிலையில்
அந்த மண்டல கூட்டமானது இன்று காலை மண்டல அலுவலகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது இதில் இரண்டாவது மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம் மற்றும் உதவி ஆணையர் பத்மநாபன் மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் இந்த மண்டல குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்
கடந்த வெள்ளிக்கிழமை மண்டல குழு கூட்டம் நடைபெற்ற போது கூட்ட அரங்கில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்க த. வெ. க.எம். எல். ஏ. செந்தில்குமார், அ. தி.மு.க. காங்கிரஸ் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.தலைவர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர் படத்தை அகற்ற மாட்டோம் என்று திட்டவட்டமாக மறுத்து விட்டனர் இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.இதையடுத்து தலைவர் கூட்டத்தை ரத்து செய்தார். இந்த நிலையில் மீண்டும் இன்று நடைபெற்ற மன்ற கூடத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா. மு. க. ஸ்டாலின் உள்பட 8பேரின் புகைப்படங்கள் வைக்கப்பட்ட நிலையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் தீர்த்தி பேசும் போது கடந்த 15 ஆண்டுகளாக மெட்ரோ வாட்டர் மற்றும் கழிவு நீர் இணைப்புக்கான வரியினை செலுத்தி வருபவர்களுக்கு இதுவரையும் இணைப்பு கொடுக்க வில்லை, அதே நேரத்தில் மெட்ரோ வாட்டர் வரி கட்டாத சில வீட்டு உரிமையாளர்களால் கடை நடத்தி வரும் வியாபாரிகளின் கடைகளை பறக்கும் படையினர் திடீரென வந்து கடையை மூடி சீல் வைத்து விட்டு செல்கின்றனர்.இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மெட்ரோ வாட்டர் வரி கட்டும் அனைவருக்கும் இணைப்பு வழங்க வேண்டும் என்றார். மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் மணலியில் அடிக்கடி ஏற்படும் உயர் மின் அழுத்தம் காரணமாக என் வீட்டில் 3 ஏ.சி மிஷின்கள், பிரிட்ஜ் ரிப்பேர் ஆகி விட்டது மின்வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் சரி செய்ய வேண்டும் என்றார். இதே குற்றச்சாட்டை கவுன்சிலர்களும் கூறினர். இதையடுத்து 153 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன