திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜ் மன்னார்குடி மேல வீதியில் உள்ள நகராட்சி அர்பன் பேங்க் நடுநிலைப் பள்ளியில் தனது மனைவி மகன் மகளுடன் வந்து வாக்களித்தார். எஸ் ஐ ஆர் முறையினால்தான் தமிழகத்தில் வாக்கு சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், அதிமுக தமிழகத்தில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.