கல்பாக்கம் சூலை 23
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் சமூக ஆர்வலருமான ஏ அப்துல் உசேன் (எ) கிங் உசேன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்து கடலோரக் கிராமம் வாயலூர் ஊராட்சி உள்ளது இந்த கிராமத்தை அடுத்து கடலூர் பரமேஸ்வரமங்கலம் ஆயப்பாக்கம் நல்லாத்தூர் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பதில் ஈடுபட்டு வருகின்றனர் அருகில் கடல் உள்ளதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்புத் தன்மையுடன் இருந்ததால் பயிர் செய்ய முடியாமலும் சுவையான குடிநீர் இல்லாமலும் மக்கள் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்தனர்
பல போராட்டங்களை அடுத்து மழைக்காலங்களில் கடலில் வீணாகக் கலக்கும் மழை வெள்ளத்தை சேமிக்க கிழக்கு கடற்கரைச் சாலை வாயலூர் பாலாற்றின் முகத்துவாரப் பகுதியில் 32.50 கோடி மதிப்பீட்டில் 1,200 மீட்டர் நீளமும், 5 அடி உயரமும் கொண்ட தடுப்பணை 2019 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது இந்த அணையில் இருந்து கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் சுற்றுப் புற கிராம மக்கள் பயனடைந்து வரும் நிலையில் வாயலூர் தடுப்பணை தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு செடிகொடிகள் வளர்ந்து காணப்படுகிறது
எனவே தடுப்பணை அமைந்துள்ள கிழக்கு கடற்கரைச் சாலை பாலாற்றின் இருபுறமும் உள்ள மண் மேடுகளை முற்றிலும் அகற்றி தூர் வாங்கியும் முகத்துவாரத்தில் உள்ள தடுப்பணைச் சுவரை உயர்த்தியும் வரும் காலத்தில் மழை வெள்ளம் அதிக அளவில் சேமிக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்துல் உசேன் கோரிக்கை விடுத்துள்ளார்