நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி பிஎஸ் மோகன் போட்டியிடுகிறார்.

நாமக்கல் அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி P.S. மோகன் தமது குடும்பத்தினருடன் சென்று, நாமக்கல் மாநகராட்சி பெரியபட்டி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருவதை காண முடிகிறது. ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாக தெரிகிறது. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமைவது உறுதி. அதனை உறுதி செய்யும் வகையில் வாக்குச்சாவடி மையங்களில் நல்ல எழுச்சி காணப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது என்றும் நாமக்கல் அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி பிஎஸ் மோகன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது வேட்பாளர் குடும்பத்தினர், தேசிய ஜனநாயக கூட்டணியினர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *