காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயத்தில் தெருநாய்களுக்கு உணவு வழங்குவதற்கு நகராட்சி நிர்வாகம் தனி இடம் ஒதுக்கி, நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
காங்கயம் நகராட்சியில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு சிலர் ஆங்காங்கே உணவு வழங்கி வருகின்றனர். பல்வேறு இடங்களில் உணவு வழங்குவதால், சில நாய்கள் அந்தந்த இடங்களில் நின்று உணவு வழங்காமல் செல்பவர்களை அச்சுறுத்தி வருகின்றன.
இதையடுத்து, தெருநாய்களுக்கு பொதுமக்கள் உணவு வழங்குவதற்கு வசதியாக காங்கயம் நகராட்சி நிர்வாகம் தனி இடம் ஒதுக்கி, உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, காங்கயம் நகரில், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு, நகரப் பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் பகுதி, சென்னிமலை சாலையில் உள்ள நகராட்சிக் குப்பைக் கிடங்கு அருகில் என, 3 இடங்களை ஒதுக்கியுள்ளது. இது குறித்து அந்தந்த இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இடங்களில் தெருநாய்களுக்கு (சமூக நாய்கள்) உணவு வழங்கலாம் என, காங்கயம் நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.