தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு அறையில் தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது சுமார் 300-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் விளாத்திகுளம் கோவில்பட்டி ஓட்டப்பிடாரம் திருச்செந்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கண்ட்ரோல் யூனிட் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் ஆகியவை பாதுகாப்பாக தூத்துக்குடி வ உ சி அரசு பொறியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டன
இதைத் தொடர்ந்து தற்போது வாக்கு என்னும் மையத்தில் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்காக உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் வைக்கப்பட்டு பின்னர் தேர்தல் பார்வையாளர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான விஷு மகாஜன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது
வாக்கு என்னும் மையத்தில் 60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது மேலும் பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படையினர் காவல்துறையினர் என 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தெரிவித்தார்