கோவையில் ரவுண்ட் டேபிள் வடக்கு மற்றும் லேடீஸ் சர்க்கிள் ஆகிய அமைப்புகள் இணைந்து பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் “Flight of Fantasy எனும் திட்டத்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றனர்.

ஆதரவற்ற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு விமானத்தில் பயணிக்கும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் கோவையில் இருந்து சென்னைக்கு சுற்றுலா அழைத்து செல்கின்றனர் இந்நிலையில் இந்த ஆண்டு ,போத்தனூர் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளை கோவையில் இருந்து ஒரு நாள் சுற்றுலாவாக சென்னைக்கு விமானத்தில் அழைத்து புதிய அனுபவத்தை மாணவர்களுக்கு தன்னார்வ அமைப்பினர் வழங்கியுள்ளனர்..

காலை கோவை விமான நிலையம் வந்த குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர் இது குறித்து தன்னார்வ அமைப்பினர் கூறுகையில், ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அத்தகைய குழந்தைகளின் கனவை நனவாக்கும் வகையில் இந்த சேவையை வருடா, வருடம் செய்து வருவதாக தெரிவித்தனர்.

கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் 20 தலைவர் ராகுல் கி்ருஷ்ணகோபால்,லேடீஸ் சர்க்கிள் சேர் பெர்சன் நிகிதா ராகுல்,மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் 100 தலைவர் பிரவேஷ் ஜெயின், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திபேந்தர் சிங்,மற்றும் ராஜேஷ் போஹ்ரா,கவுரவ் கபூர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *