தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட கொக்கம்பாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொக்கம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்(41) என்பவர், தனது மனைவி ராஜேஸ்வரியுடன் விவசாயம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து, குழந்தைகளான நட்சத்திரா (13), கார்த்திகேயன் (10) ஆகியோரை அவர்களின் (அம்மாவின் பெற்றோர் மாரிமுத்து ஈஸ்வரி )கள்ளக்கிணறு அழைத்து சென்று பராமரித்து வந்தார். மனைவியின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் சுரேஷ் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று சுரேஷ் இடையப்பட்டி டு கொக்கம்பாளையம் மேட்டுக்கடை டு ருத்ராவதி இரு சாலை இணைக்கும் மண் இட்டரியில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை அக்கம்பக்கத்தினர் கவனித்து, குண்டடம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குண்டடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *