தேர்தல் பணியின் போது திடீர் மரணம்-21 குண்டுகள் முழங்க துணை போலீஸ் சூப்பிரண்டு உடலுக்கு மரியாதை

ஐ.ஜி., டி.ஐ.ஜி. பங்கேற்பு…
மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 56). இவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.
இந்தநிலையில், ஒட்டன் சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடையக் கோட்டை வாக்குச் சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாப மாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, திருப்பாலை பகுதியில் உள்ள அவரது வீட்டில் உடலுக்கு இறுதி மரியாதை நடந்தது. இதில், தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, மாநகர காவல் ஆணையர் அபிஷேக் தீக்சித், மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார், போதைப்பொருள் தடுப்பு டி.ஐ.ஜி. மூர்த்தி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு சூப்பிரண்டு மதிவாணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் 21 குண்டுகள் முழங்க மதுரை மாநகர் போலீ சார் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் போலீசார் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இவர் 1996-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி, பின்பு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று மதுரை மாநகர், மதுரை புறநகர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பாக பணிபுரிந்து பின்பு, துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்டம், மதுரை குற்றத்தடுப்பு பிரிவு, குற்ற புலனாய்வுத் துறை மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு ஆகிய சிறப்பு பிரிவுகளில் பணியாற்றியது குறிப்பிடத்தக்க
தாகும்..