எண்ணூரில் உள்ள பிரசித்தி பெற்ற புனித சூசையப்பர் ஆலயத்தின் தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது
எண்ணூர் புனித சூசையப்பர் ஆலய தேர் திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் 65 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சிறப்பு திருப்பலிகள், நவநாள் ஜெபங்கள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழாவில், புனித சூசையப்பர், ஆரோக்கிய மாதா, அந்தோணியார் மற்றும் சவேரியார் ஆகியோரின் அலங்கரிக்கப்பட்ட சொரூபங்கள் தனித்தனி தேர்களில் பவனியாக வலம் வந்தனர்.
இந்தத் தேர் பவனி கோவில் வளாகத்தில் தொடங்கி, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் மாதா பாடல்கள் பாடியபடி தேரை இழுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர் இந்தத் திருவிழா அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பங்கேற்று மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது