எ.பி. பிரபாகரன்,பெரம்பலூர்
செய்தியாளர் .
தேர்தல் பணியில் ஈடுபட்ட போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கிய அதிமுக வேட்பாளர்.
பெரம்பலூர். ஏப்.27. கடந்த 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னர் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் முருகேசன் கடந்த 20ம் தேதி எதிர்பாராதவிதமாக விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த செய்தியை தாமதமாக கேள்விப்பட்ட அதிமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், மாவட்ட செயலாளருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் “பிரியம்” மருத்துவ மனைக்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்து நிதி உதவி வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாநில மாணவரணி இணைச் செயலாளர் மனிஷ் செழியன், முன்னாள் அரசு வழக்கறிஞர் கதிர். கனகராஜ், வேப்பந்தட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி, அதிமுக கிளைச் செயலாளர் புகழேந்தி, வழக்கறிஞர் பால்ராஜ், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் தேவேந்திர பாலாஜி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரிடர் மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் நகர, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்..