மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என
சூசக பதில் …..

கொடைக்கானல் செல்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். அவரிடம் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சூசகமாக மகிழ்ச்சியுடன் விரலை உயர்த்தி காண்பித்தார்.

கொடைக்கானலில் ஓய்வு எடுப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர், தனி விமானம் மூலம் மதுரை வந்தனர்.

முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி விமான நிலையத் தில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கிடையே விமான நிலையத்திற்கு வரும் முதல்-அமைச்சரிடம் கேள்விகள் கேட்பதற்காக நிருபர்களும் அங்கு திரண்டிருந்தனர்.
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என கேள்வி எழுப்பினர். அதற்கு, வெற்றி வாய்ப்பு பிர காசமாக இருக்கிறது என்பதை குறிக்கும் வகையில், சிரித்தபடி கட்டை விரலை உயர்த்தி காட்டி முதல்-
அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூசகமாக பதிலளித்தார். இதையடுத்து காரில் புறப்பட்ட அவர், சாலை மார்க்கமாக காரில் கொடைக்கானல் சென் றார். அங்கு அவர் 3 அல்லது 4 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *