அருள்மிகு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவித்துள்து;

வருகின்ற 2026 ஏப்ரல் 30 இரவு 9.12க்கு பௌர்ணமி ஆரம்பித்து , மே 1 ஒன்றாம் தேதி இரவு 10 .52 வரை பௌர்ணமி திதி உள்ளது சித்ரா பௌர்ணமி முன்னிட்டு கிரிவலம் செல்வதற்கான நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது அன்று பக்தர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டும் என கூறப்படுகிறது .வருகின்ற பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது அதே சமயத்தில் பக்தர்கள் கிரிவலம் வருவதற்கான நேரத்தையும் அறிவித்துள்ளது


அதன்படி சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் 30.04.2026 வியாழக்கிழமை இரவு 9:52 மணி முதல் 01.05.2026 வெள்ளிக்கிழமை இரவு 11:08 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செய்யலாம். வருகின்ற பக்தர்கள் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வராமல் அடிப்படையான தேவைகள் மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவையை எடுத்துக்கொண்டு கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் மிகுந்த கவனத்தோடு கிரிவலம் வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *