தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சி புதூருக்கு ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டா புளிப்பாளையம் அருகே வெள்ளியங்காட்டு தோட்டத்தில் நாச்சிமுத்து (45) கௌசல்யா (40) அவர்களது மகள் கவிகாஸ்ரீ (19) இவர்கள் குடியிருந்து வருகின்றனர் நாச்சிமுத்து தலவாய்பட்டினத்தில் மின்வாரியத் துறையில் சேர்மன் ஆக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் நேற்று மாலை சுமார் ஆறு முப்பது மணி அளவில் முன்புறம் பூட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள விநாயகர்களுக்கு சென்றுள்ளனர்

அப்போது முன்புறமுள்ள கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பீரோ மற்றும் லாக்கருகளை தோட்டத்து உபர்நிலையை வைத்து உடைத்துக் கொண்டு இருந்தபோது பின்புறம் உள்ள குடியிருந்து வருபவர்களுக்கு ஏதோ வித்தியாசமான சத்தத்தை கேட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது அப்போது நான்கு முகமூடி திருடர்கள் தப்பி ஓடினர்

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் நாச்சிமுத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர் தவளைக் கேட்டு நாற்று மற்றும் கௌசல்யா வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவை உடைத்து வீட்டில் உள்ள பீரோவை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தன தகவல் அடிப்படையில் தாராபுரம் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர்

சம்பவ இடத்தில் விரைந்து சென்று அங்குள்ள ஆதாரங்களை சேகரித்து புகார் எண் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து நாச்சிமுத்துவின் அண்ணன் கொங்கு ரமேஷ் இது குறித்து கூறுகையில் தாராபுரம் நகர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் காவல்துறையினர் சரியான ரோந்துப் பணி ஈடுபடுவதில்லை இதனால் தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி இது போன்ற திருட்டு மற்றும் திருட்டு முயற்சிகள் நடைபெற்று வருகிறது ஆகவே முறையான இரவு ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் மேலும் இந்த திருடர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *