திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் வருகை தந்தார்கள் இரண்டாம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விதமாக பாஜக சார்பில் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது;தயிர் சாதம் ,வெஜிடபிள் சாதம், புளி சாதம், பருப்பு சாதம், தக்காளி சாதம் மற்றும் பல்வேறு வகையான சாதங்களை திருவண்ணாமலை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கே. ரமேஷ் .ஏற்பாட்டில் காலை 8:00 மணி முதல் தொடர் அன்னதானம் தொடங்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் சி. ஏழுமலை அவர்கள் அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜை செய்து அன்னதானத்தை துவக்கி வைத்தார். உடன் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் கே .ரமேஷ் மாவட்ட பொதுச் செயலாளர் செங்கம் ரமேஷ். மாவட்டத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் என் .எஸ். பூபதி. மாநகரச் செயலாளர் மாந்தோப்பு ராஜா. அலுவலக செயலாளர் பழனி. பெண்ணாத்தூர் விஜயகுமார்.மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடன் இருந்து அன்னதானம் வழங்கினர்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் செய்தியாளர் சிவ சக்தியோகினி 9384111563.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *