தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கெளமாரி யம்மன் திருக்கோயிலில் ஆடி மாதத்தின் முன்றாம் வெள்ளிக்கிழமையையொட்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கல் கவசம் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை என்பதால் கம்பம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் அம்மனை மனமுருக வேண்டி அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்.
ஆடி மூன்றாம் வெள்ளி என்பதால் அம்மனுக்கு சிறப்பு கல் கவசம் அலங்காரம் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் கோயில் செயல் அலுவலர் அ. நதியா தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்