துறையூர் ஜீலை-31
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளுக்கும் நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. துறையூர் நகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு தற்போது குடிநீருக்கான வைப்பு தொகை 4000ரூபாயும், மாதாந்திர கட்டணம் 80 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு உத்தரவு படி இனி குடியிருப்புகளுக்கு குடிநீருக்கான வைப்பு தொகை 8000ரூபாயும், மாதாந்திர கட்டணம் 300 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாகவும் இது குறித்து ஆட்சேபனை மற்றும் கருத்துக்கள் வரவேற்கப்படுவதாக நகராட்சி ஆணையர் சார்பில் தமிழ் தினசரி நாளிதழில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் பாலமுருகவேல் (அமைதி பாலு) , தீனதயாளன், கௌதமி, சந்திரா ஆகியோர் குடியிருப்புகளுக்கு மாதாந்திர கட்டணம் 150 ரூபாயும், வைப்புத்தொகை தற்போது உள்ளது

போல் 4000 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், வணிக நிறுவனங்களுக்கு குடிநீருக்கான வைப்புத் தொகை 8000 ரூபாய் எனவும், மாதாந்திர கட்டணம் 500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தங்களது கருத்துக்களை நகராட்சி ஆணையர் கண்ணனிடம் மனுவாக கொடுத்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *