காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயம்,அருகே, 330 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலத்தை நில அளவீடு செய்து பயனாளிகளுக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டது.
காங்கயம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மூர்த்திரெட்டிபாளையம், சகாயபுரம், நெய்க்காரன்பாளையம், பெரியார் நகர், சத்யா நகர், கேஜிகே நகர், ராமபட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சொந்த வீடு இல்லாதவர்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பல வருடங்களாக மனு கொடுத்து வந்தனர் இதையடுத்து, கடந்த வருடம் மே மாதம் மேற்கண்ட தகுதியுள்ள 330 குடும்பங்களுக்கு காங்கயம் அருகே, வீரணம்பாளையம் ஊராட்சிப் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பட்டாவுக்கு உரிய இடத்தை அளவீடு செய்து தர வலியுறுத்தி, கடந்த ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனர் இந்த நிலையில், மேற்கண்ட பயனாளிகளுக்கு நிலத்தை அளவீடு செய்யும் பணி காங்கயம் சமூக நீதித்துறை வட்டாட்சியர் கோபால் தலைமையில், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 330 பயனாளிகளுக்கு உரிய இடத்தை அளவீடு செய்து, அளவீடு கல் நட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய கடந்த திமுக தலைமையிலான ஆட்சியாளர்களுக்கும், தற்போது அந்த நிலத்தை அளவீடு செய்து வழங்கிய தற்போதைய தவெக தலைமையிலான ஆட்சியாளர்களுக்கும் பயனாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த நில அளவைப் பணியில் சமூக நீதித்துறை நில அளவையர் பாபு மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். இப்பணிகளின் போது ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.