தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் கோவையில் உள்ள காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரியின் வேளாண்மைத்துறை மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் சார்பில் கிராமப்புற மதிப்பீட்டு நிகழ்ச்சி நடந்தது
நிகழ்ச்சிக்கு வேலாயுதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் தலைமை வகித்து மாணவர்களையும் விவசாயிகளையும் பாராட்டி, கிராம வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பின் அவசியத்தையும், கிராமப்புற மதீப்பீட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மூத்த விவசாயி முருகன் முன்னிலை வகித்தார். டாக்டர் நிவேதிதா தற்போதைய யுகத்தில் வேளாண்மையில் நவீன யுக்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்
நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, காலவரிசை, மேட்ரிக்ஸ், வள வரைபடம், வென் வரைபடம் மற்றும் சமூக வரைபடம் ஆகிய கருவிகளில் தங்களது கருத்துகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், . இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான திட்டமிடல் குறித்து நடைமுறை அனுபவத்தை வழங்கியது. குறிப்பிடத்தக்கது