உலகின் மிகவும் விருப்பமான நகை நிறுவனமான ‘ஜோய் ஆலுக்காஸ்’ (Joyalukkas), தனது புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட விற்பனையகத்தைத் திறந்து வைத்ததுடன், கோயம்புத்தூரின் 100 அடி சாலையில் ‘பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’ (Brilliance Diamond Jewellery Show) எனும் பிரம்மாண்டமான நிகழ்வையும் தொடங்கி வைத்து அப்பகுதியையே ஜொலிக்கச் செய்தது. இந்த இரட்டை நிகழ்வுகளைத் திரைப்பட நடிகை செல்வி. மாளவிகா சர்மா அவர்கள், திரு. பி.பி. செல்வன் (தலைவர், PPS குழுமம்), டாக்டர் கே.ஏ. குரியச்சன் (முன்னாள் மாவட்ட ஆளுநர், ரோட்டரி இன்டர்நேஷனல் – கோயம்புத்தூர்), திரு. ஹென்றி ஜார்ஜ் (COO, ஜோய் ஆலுக்காஸ்), திரு. பி.டி. ஜோஸ் (பொது மேலாளர் – நகைப் பிரிவு, ஜோய் ஆலுக்காஸ்), திரு. ராஜேஷ் கிருஷ்ணன் (சில்லறை விற்பனைப் பிரிவுத் தலைவர், ஜோய் ஆலுக்காஸ்), திரு. அனிஷ் வர்கீஸ் (சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர், ஜோய் ஆலுக்காஸ்), திரு. சுமேஷ் கே.ஏ. (பிராந்திய மேலாளர், ஜோய் ஆலுக்காஸ்) மற்றும் பிற முக்கியப் பிரமுகர்கள் மற்றும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.