திருவண்ணாமலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மக்கள் கிரிவலம்;


திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று மக்கள் கிரி வலம் வருவது வாடிக்கை ஆனால் சித்திரை மாதத்தில் வருகின்ற சித்ரா பௌர்ணமி சிறப்பு என்பதால் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 30.04.2026 இரவு பௌர்ணமி தொடங்கி 01.05.2026 இரவு வரை பௌர்ணமி இருப்பதால் பக்தர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளது கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பகலிலும் மக்கள் கிரிவலம் வருவதை பார்க்கும் போது மெய்சிலிர்ப்பாக இருந்தது தங்களை தாங்களே ஒருங்கிணைத்துக் கொண்டு ஒரு பக்கம் வாகனங்கள் செல்ல வழி விட்டு மற்றொரு பக்கம் மக்கள் சாரை சாரையாக கிரிவலம் வருவதை பார்க்கும் போது மெய்சிலிரித்து போனது.

இன்று இரவு வரை பௌர்ணமி இருப்பதால் மாலை இன்னும் அதிக மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி 9384111563

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *