முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர். செந்தில்குமார்
கமுதி ஏப்:-1
பணிநிறைவு பாராட்டு விழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாட்சியராக வ.சேதுராமன் பணிபுரிந்து பொதுமக்களிடம் நற்பெயர் பெற்று பணியிட மாறுதலில் சென்று மீண்டும் கமுதி வட்டாச்சியராக(SSS) பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற மக்கள்சேவகரும் தமிழ்நாடு வருவாய்த்துறை (MBC/ DNT) அலுவலர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவருமான வ.சேதுராமன்,பணி நிறைவு மற்றும் பாராட்டு விழாவில் கமுதி வட்டாச்சியர் அலுவலகர்கள் சங்கம் சார்பில் வட்டாச்சியர் துணை வட்டாச்சியர் மற்றும் அரசுப்பணியாளர்கள் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர்
இந்நிகழ்வில் ஆப்பநாடு மறவர் சங்கத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர், அகில இந்திய DNT நலச்சங்கத்தின் தமிழ்நாடு பொதுச்செயலாளர்,அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பிலும் முக்குலத்தோர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர்/தலைவர் ப.கீரந்தை மு.வீரப்பெருமாள் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஸ்ரீ பகவதி அறக்கட்டளை சார்பில். வெள்ளைப்பாண்டியன் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.