தமிழக கேரளா எல்லையில் உள்ள மங்களதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா கொண்டாட்டம்

தேனி மாவட்டம் தமிழகம் கேரளா எல்லையில் விண்ணேற்றிப்பாறையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா வெகு விமரிசையாக திருவிழா நடைபெற்றது
தமிழகம் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கான கோவிலுக்கு வந்து கண்ணகி தேவியை அம்மனை வழிபட்டனர் தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாலையில் பொங்கல் வைத்து பசுமையை போற்றும் வகையில் கண்ணகி தேவி பச்சை பட்டு வண்ண மலர்கள் மற்றும் சிறப்பு அலங்கார பொருட்கள் கொண்டு சிறப்பான முறையில் கண்ணகி தேவி திருவுருவ சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்
உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பனியன்குடி வழியாக கோவிலுக்கு நடந்து வரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் கருதி வழி நெடுகிலும் ஆங்காங்கே மருத்துவ கூடாரங்கள் அமைத்து மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது
மேலும் கூடுதலாக குளுக்கோஸ் பொடி உப்புக் கரைசல் உள்ளிட்ட பொருட்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக வழங்கப்பட்டது பக்தர்கள் அனைவருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத அளவிற்கு தேவையான அளவு சுகாதாரமான குடிநீர் கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் வாகன நெரிசலை ஒழுங்கு படுத்துவதற்காக வழி நெடுகிலும் காவல்துறையினர் பணி அமர்த்தப்பட்டு சீரான போக்குவரத்துக்கான பணிகளை மேற்கொண்டனர்
பொதுமக்கள் சிரமம் இன்றி சென்று வருவதற்கு குமுளி பேருந்து நிலையத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான ஆண் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுனர். மேலும் இரு மாநில வனத்துறையினர் வனவிலங்குகளால் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்