கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் கோவையை சுற்று உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர், வீராங்கனையர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் (Fencing) எனும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ,
மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக வாள் வீச்சு போட்டிகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன இந்நிலையில் கோவையில் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நான்காவது மாவட்ட அளவிலான கேட ட் வாள் வீச்சு விளையாட்டு போட்டி சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது..
கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கத்தின் செயலாளர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்ற போட்டியை ஏங்கர் ஸ்போர்ட் வேர்ல்டு இயக்குனர் நித்யானந்தம் துவக்கி வைத்தார்..
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலருக்கிம் தனித்தனியே நடைபெற்ற இதில், இதில் ஃபாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ், போட்டிகள் நடைபெற்றன…
இதில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகள் அடுத்து கன்னியாகுமரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட வாள் வீச்சு தலைமை பயிற்சியாளர் சரவணன்,போட்டிகளுக்கான இயக்குனர் அமிர்தராஜ்,மற்றும் விமல் பிரசாத் உட்பட சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மேற்கொண்டனர்..