C K RAJAN
Cuddalore District Reporter
9488471235
கடலூர்
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் பூவாணிக்குப்பம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
வேளாண்மை உழவர் நலத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலையில் குறிஞ்சிப்பாடி வட்டம், பூவாணிக்குப்பம் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் வேன் மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பூவாணிக்குப்பம் சாலை பகுதியில் தனியார் பேருந்து மற்றும் முந்திரிகொட்டை உடைப்பதற்கு ஆட்களை ஏற்றிவந்த தனியார் வேன் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் பேருந்து மற்றும் வேனில் பயணம் மேற்கொண்ட சுமார் 24 நபர்கள் கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் பலத்த காயமடைந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தின் காரணமாக அரசு தலைமை மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நல்ல முறையில் உயர்தரமான சிகிச்சையளித்து அவர்கள் நலம்பெற்று விரைவில் வீடு திரும்புதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் உள்ளனர்.