தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் திட்ட முகம் நடைபெற்று வருகிறது இதனைத் தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மஞ்சவாடி ஊராட்சியில் மாவட்ட வருவாய்த்துறை சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் மாவட்ட ஆட்சியர் சதீஷ் கலந்து கொண்டு தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை பொதுமக்கள் நன்கு அறிந்து திட்டங்களின் மூலம் பயனடைய வேண்டும் என்று கூறினார்
இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி, விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரூர் சட்டமன்ற உறுப்பினர் வெ.சம்பத்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த முகாமில் வருவாய்த்துறை, ஊராட்சி வளர்ச்சி துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட 17 துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்