தஞ்சாவூர், ஜூலை- 31.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள லயன்ஸ் கோல்மன் ஜூப்ளி ஹாலில் தஞ்சாவூர் சிகரம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடந்தது.
விழாவிற்கு சங்கத் தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கி, வரவேற்றார். செயலாளர் ஜான்சன் அறிக்கை படித்தார்.
இதனைத் தொடர்ந்து 2026- 27-ஆம் ஆண்டிற்கான தலைவராக கே.கண்ணன் செயலாளராக ஜி.கண்ணன், பொருளாளராக எஸ்.லலிதா முதல் துணைத் தலைவராக டாக்டர்.அருள்ராஜ் சேவியர், 2-ஆம் துணைத் தலைவராக ஜான்சன், மக்கள் தொடர்பு அலுவலராக பிரகதீஸ்வரன், ஜிஎம்டி. ஒருங் கிணைப்பாளராக நந்தகோபாலன், ஜி.எஸ்.டி ஒருங் கிணைப்பாளராக பாலசுப்
பிரமணியன், உறுப்பினர் வளர்ச்சி தலைவராக எட்வின்பிரபு, இயக்குநர்களாக உதயகுமார், ஜான்சன் சேவியர், மார்டின், ஹரிகிருஷ்ணன், பாபிலோன் சுந்தர் ஆகியோர் பதவி ஏற்றனர்.
புதிய நிர்வாகிகளை மாவட்ட முதல் துணை ஆளுநர் டாக்டர் ஸ்டாலின் பணியில் அமர்த்தினார். புதிய உறுப்பினர்களான ஏ.வடிவேல், எஸ்.நேரு, ஏ.செந்தில் சிவக்குமார், ஆர்.தமிழ்வாணன், கே.கந்தசாமி ஆகியோர்களை கருணைக்கடல் சிகரம் லயன் சங்கத்தில் இணைத்தார். முன்னாள் தலைவர் என்ஜினீயர் வேதமூர்த்தி சேவைத் திட்டங்களை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனூஸ் கலந்து கொண்டு அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் பத்திரிகையாளர் சாமிநாதன் மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, கோவிந்தராஜ், ஜெயசீலன், பிரகாஷ், ராஜேந்திரன், கவிஞர் அழகிரிசாமி ஆகியோருக்கு காமராஜர் விருது வழங்கினார். விழாவில் சசிதரன், எழிலரசி ரவி, பேராசிரியர் இராஜேந்திரன், அனந்த
கிருஷ்ணன், சீனிவாசன், வில்வானந்தம், ரமேஷ், அன்பரசன், கோபால்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் செயலாளர் ஜி.கண்ணன் நன்றி கூறினார்.