வனத்துறை ஊழியர்களுக்கான விஷபூச்சிகளிட மிருந்துபாதுகாப்பு உடையை சாய்ராம் வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் செய்யது ஆசிக் , சஞ்சய்குமார், அஸ்வின் , திலீபன் ஆகிய மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த பாதுகாப்பு உடை வனத் துறை மற்றும் தேனீக்கள் பராமரிப்பு மற்றும் கொசு, பாம்பு களிடமிருந்தும் பாதுகாக்க பயன்படும்.வனத் துறையில் கொடுக்கும் உடையில் உள்பகுதியில் தடிமனான வலை காற்றோட்டத்துடன் அமைக்கப்படுகிறது.அதனால் கொடிய விஷ பூச்சிகள், தேள் மற்றும் பாம்பு ஆகியவற்றால் வனத்துறை யினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏனென்றால் பேண்ட், மற்றும் சட்டையின் உட்பகுதியில் தடிமனான வலை உள்ளதால் விஷபூச்சிகள் கடிக்க முடியாமல்,எந்த ஒரு காயமும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
அது மட்டும் இல்லாமல் வீடுகளிலும் கொசுக்கடியினால் பல நோய்கள் வராமல் இந்த உடை பாதுகாக்கிறது.,
இரவுநேர பணி யாற்றும், காவல் துறையினர், காவலாளிகளுக்கும் இந்த உடை பயனுள்ளதாக இருக்கும்.இந்த உடையின் உட்பகுதியில் தடிமனான வலை பயன்படுத்தப்பட்டுள்ளதால் விஷபூச்சிகள் கடித்தால் அதன் பற்கள் நம் உடலில் படாமல், எந்த வித காயம் ஏற்படாமல் கபாதுகாக்கிறது.
செய்யது ஆசிக் , சஞ்சய்குமார், அஸ்வின் , திலீபன் ஆகிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களைபள்ளி முதல்வர் லெட்சுமி , அனைத்து அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் அப்துல் ரஷாக் ஆகியோர் பாராட்டினர்.