திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உட்பட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 2,60,027 வாக்குகளில், 2,17, 995 வாக்குகள்(தபால் வாக்குகள் உட்பட) பதிவானது.

நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, . திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். 24 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் 93408 வாக்குகள் பெற்றார் தனக்கு அடுத்தபடியாக வந்த தவெக வேட்பாளர் வி.வீரமணியை விட 18148 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதில் தவெக வீரமணி பெற்ற வாக்குகள் 75260 ஆகும். இத்தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோவி. சந்திரசேகரன் 36387 வாக்குகளும், நாதக வேட்பாளர் பி.அஸ்வினி 10031 வாக்குகளும் பெற்றனர். இதில், தவெக, பாஜக வேட்பாளர்கள் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதியில் மொத்தமுள்ள 2, 34,340 வாக்குகளில் தபால் வாக்குகள் உட்பட 1,94,144 வாக்குகள் பதிவாகின. இத்தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் 68416 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் டிஆர்பி.ராஜாவைவிட 1566 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் வெற்றிபெற்ற டிஆர்பி. ராஜா பெற்ற வாக்குகள் 66850 ஆகும். தவெக வேட்பாளர் உ.ராஜராஜன் 44266 வாக்குகளும், நாதக வேட்பாளர் பாரதிச் செல்வன் 8240 வாக்குகளும் பெற்றனர். இத்தொகுதியில் போட்டியிட்ட திமுக, தவெக வேட்பாளர்கள் தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

நன்னிலம் சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் உள்ள 2 ,67, 432 தபால் வாக்குகள் உட்பட 2,31,583 வாக்குகள் பதிவாயின. இதில் 14 அதிமுக, எஸ்டிபிஐ, தவெக வேட்பாளர்கள் உட்பட 14 பேர் போட்டியிட்டனர்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ், 1,03,462 வாக்குகள் பெற்று,தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கைவிட 41724 வாக்குகள் கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றார்.

முகமது முபாரக் பெற்ற வாக்குகள் 61738 ஆகும், இந்தத் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் பிரபாகரன் 54,530 வாக்குகளும், நாதக வேட்பாளர் தி.தேன்மொழி 8446 வாக்குகளும் பெற்றனர். இத்தொகுதியில் போட்டியிட்ட எஸ்டிபிஐ, தவெக வேட்பாளர்கள் தவிர அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் மொத்த முள்ள 2,26,845 வாக்குகளில் தபால் வாக்குகள் உட்பட 1,91,116 வாக்குகள் பதிவாகின. இத்தொகுதியில் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இவர்களில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க. மாரிமுத்து 74062 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் எஸ். பாண்டியனை விட 12,922 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். தவெக பாண்டியன் வாக்குகள் 61140 பெற்றுள்ளார்.

இத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் உ. பாலதண்டாயுதம் 43,073 வாக்குகளும்,நாதக வேட்பாளர் ஆர்.வினோதினி 10,176 வாக்குகளும் பெற்றனர். இத்தொகுதியில் போட்டியிட்ட தவெக, அதிமுக வேட்பாளர்கள் தவிர அனைவரும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *