தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத்துறையில் பாவேந்தர் பாரதிதாசன் 136ஆவது பிறந்தநாள் விழாவிற்கான அரசு அறக்கட்டளைச் சொற்பொழிவுக் கருத்தரங்கம் வளர்தமிழ்புலக் கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மொழிபெயர்ப்புத்துறைத் தலைவரும், மக்கள் தொடர்பு அலுவலரும் இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் இரா.சு.முருகன் வரவேற்றார்.

கருத்தரங்கில் முனைவர் பட்ட
ஆய்வாளர் த.வீரமணிகண்டன் இணைப்புரை வழங்கினார். பாவேந்தர் பாரதிதாசன் திருவுருவப் படத்திற்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழு உறுப்பினர் மருத்துவர் முனைவர் பெ.பாரதஜோதி அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி அவர் பேசுகையில் உண்மையிலேயே பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பன்முகத்தன்மை என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பாரதிதாசனின் சுதந்திர தாகம், வாழ்வியல், சூழலியல், காதல் போன்றவைகளை தனது பாடல்களால் மிகச்சிறப்பானதொரு வகையில் எடுத்துரைப்பதில் அவருக்கு நிகர் எவருமில்லை எனப் பேசினார்.

கருத்தரங்கிற்கு வளர்தமிழ்ப்புல முதன்மையர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார்.
தொடர்ந்து முதல் அமர்வில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் மொழிபெயர்ப்புத் துறைத்தலைவர் முனைவர் பழனி அரங்கசாமி அவர்கள் பாவேந்தர் பாரதிதாசனின் பிறமொழிச் சிந்தனைகள் எனும் பொருண்மையில் உரையாற்றினார். அவர் பேசுகையில் ஆரம்பக் காலத்தில் பாண்டிச்சேரியில் வசித்து வந்த பாவேந்தர் பாரதிதாசன் மனக்குல விநாயகர் உள்ளிட்ட திருத்தலங்களில் கீர்த்தனைகள் பாடிக் கொண்டிருந்தார். பின்னர் பாரதியார் மீது கொண்ட பற்றால் ஈர்ப்பால் அவருடைய இயற்பெயரை மாற்றி பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார் .மேலும்
பாரதிதாசன் என்றும், தேசப்பற்று, நாட்டுப்பற்று, சமூக அக்கரை போன்றவற்றை தனது பாடல்களாலும் கவிதைகள் மூலமாகவும் உலகறியச் செய்தவர் பாரதிதாசன் எனக் கூறினார்.

அரசு கருத்தரங்கின் இரண்டாவது அமர்வில் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ப.இராஜமாணிக்கம் அவர்கள் பாவேந்தரின் பன்னோக்குச் சிந்தனை என்ற பொருண்மையில் . பேசுகையில் பாரதிதாசனின் சமூகப் பங்களிப்பையும் பெண் விடுதலையையும் பெண் கல்வி பற்றியும் மிகத் தெளிவாக தனது பாடல் வரிகள் மூலம் எடுத்துரைப்பதை நம்மால் தெரிந்து கொள்ளமுடிகிறது என்றும், குழந்தை திருமணம் என்பது எவ்வளவு கொடுமையானது என்றும், சாபக்கேடானது என்றும் பாரதிதாசன் தனது பாடல்வரிகள் மூலம் குறிப்பிடுகிறார் எனப்பேசினார். நிறைவில் மொழிபெயர்ப்புத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சா.விஜயராஜேஸ்வரி நன்றி கூறினார் . இதில் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பல்துறை மாணவ, மாணவிகள் மற்றும் அலுவல்நிலைப் பணியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *