தொல்லியல் ஆய்வு மையம் நிறுவனத்தலைவர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் என்பதாம் அகவை தினவிழா விழா, சிறப்பு மலர் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா திருச்சி தமிழ்ச்சங்க வளாகத்தில் நடைபெற்றது.

அனிதா குமார் வரவேற்றார் ஒருங்கிணைப்பாளர்முனைவர் வி. கோபால் முன்னிலை வகித்தார். சர்க்கரை ஆலைக் குழும நிர்வாக இயக்குனர் மு.இராமலிங்கம் சிந்து சமவெளிச் சித்தர் என்பதாம் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை
வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.


திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் பெ.உதயகுமார்,கிராமாலயா இயக்குனர்
பத்மஸ்ரீ விருதாளர் சே.தாமோதரன், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் மேனாள் அறங்காவலர் பொறியாளர் பி.கே.தியாகராஜன்,மருத்துவர் எஸ். பன்னீர்செல்வம், வழக்கறிஞர் பி.நமச்சிவாயம், ராமசாமி கல்லூரி முதல்வர் முனைவர் செ.நாகநாதன்,
அழகப்பா பல்கலைக் கழகம் மேனாள் பதிவாளர் கி.காளைராஜன்
உட்பட பலர்சிறப்பு மலரை பெற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.


சந்திரபோஸ் அறக்கட்டளை, தொல்லியல் ஆய்வு மையம் நிறுவனத் தலைவர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தொ(ல்)லியல் அந்தரங்கம் தலைப்பில் சிறப்பு காணொலிக் காட்சியினை ஒளிப்பரப்பி விளக்கினார்.தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் இல்லத்திலேயே புழங்கு பொருட்கள் காட்சியகம் நடத்தி வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்குதிருமதி அனிதாகுமார், சு. கார்த்திகேயன் போஸ் உள்ளிட்டோர் தொல்லியல் அறிஞர் விருது சான்றிதழை வழங்கினர்.


இது குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
புழங்கு பொருட்கள் காட்சியகம் என்பது நம் முன்னோர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய, மண்ணால் ஆன மண்பாண்டங்கள், உலோகக் கலன்கள், வேளாண் கருவிகள் மற்றும் கலைநயமிக்க கைவினைப் பொருட்களைச் சேகரித்து, அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாத்து காட்சிப்படுத்தும் இடமாகும். இது தமிழர்களின் பண்பாடு, கலைத்திறன் மற்றும் நாகரிக வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் நேரடிச் சான்றாகத் திகழ்கிறது.

மண் மட்டுமல்லாது, இரும்பு, செம்பு, பித்தளை, வெண்கலம் என உலோகக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும், மக்களின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அறியலாம் என்றார். யோகா ஆசிரியர் விஜயகுமார் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம், உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் பணியினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *