வால்பாறை – அக்கா மலை எஸ்டேட் புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்கா மலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா வரும் 9 ஆம் தேதி வெகுசிறப்பாக நடைபெறுவதை முன்னிட்டு இன்று கொடியேற்று விழா நடைபெற்றது
ஆலய பங்குதந்தை கிரிஸ் ஆண்டனி கொடியேற்றி சிறப்பித்த இவ்விழாவில் எஸ்டேட் மேலாளர் சுதிர் குமார், தேயிலை ஆலை அதிகாரி ஞானதயாளன், மின் அலுவலர் சாமிராஜ் ஜெபக்குமார், எஸ்டேட் மருந்தாளுநர் முருகேசன், கோவை டெக்கான் டூல்ஸ் ஹலோசி,மைக்கேல் பாபு,அமுல்ராஜ் மற்றும் ஆலய பங்கு மக்களும் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்