வால்பாறை, நவ. 3:
கோவை மாவட்டம் வால்பாறையில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ரேவா அமைப்பின் வால்பாறை கிளை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தனியார் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் சி.நாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜி.பிரேம்குமார், பொருளாளர் எஸ்.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பொள்ளாச்சி பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கோபால் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கூட்டத்தில் ரேவா அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், உறுப்பினர்களின் தேவைகள் மற்றும் குறைகள் கேட்டறியப்பட்டன.
தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
வால்பாறை செய்தியாளர்: ரவிச்சந்திரன்