திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மதுபானங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறையின் அமலாக்கப் பணியகம் குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

இதில், கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மதுபானங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், குடும்பத்தில் உண்டாகும் பிரச்சினைகள் மற்றும் சமூகத்தில் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகாமல் உடல்நலத்தையும் குடும்ப நலத்தையும் பாதுகாக்கவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் சாந்தமூர்த்தி, மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாபு, காவல் உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *