செங்குன்றம் செய்தியாளர்
மே 6
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக கொளத்தூர் த.ரவி தலைமையில் 43 வது வணிகர் தினம் 8 வது மாநில மாநாடு வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி தலைமையில் நடைபெற்றதது.
விழாவின் முதலாவதாக குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து ஜி.கே வாசன், என்.ஆர். தனபாலன், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.எ. ரகுமான் உட்பட முக்கிய பிரபலர்கள் சிறப்புரையாற்றினர்கள்.
இதில் மாநில பொது செயலாளர் ஆர்.ரமேஷ் குமார், பொருளாளர் வி என் ராஜன்,தலைமை நிலைய செயலாளர் குழந்தைவேலு, மாநில செய்தி தொடர்பாளர் எம். பி.ரமேஷ் கூடுதல் செயலாளர்கள் முனீர், ஜெயராமன் மற்றும் சென்னை மண்டல தலைவர் அருணாச்சலம்,எம்கே பி முருகன், சுவை ராஜா,செந்தில் முருகன்,சதீஷ்,விக்டர்,ரஹ்மான் உட்பட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் சென்னை மற்றும் புறநகர்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள், வியாபாரிகளின் குடும்பத்தினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.