தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 3-இடங்கள் முன்னேறி மாநில அளவில் 6-ஆவது இடம் பிடித்து சாதனை.

தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவடட்த்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில்
கடந்த ஆண்டு 96.19-சதவீதம் தேர்ச்சி பெற்று 9-ஆவது இடத்தை பிடித்திருந்த நிலையில் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி என மொத்தம் 19-ஆயிரத்து 95-மாணவர், மாணவிகள்,தேர்வு எழுதிய நிலையில் 18-ஆயிரத்து 568,மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்து 97.24-சதவீதம் தேர்ச்சிபெற்று மாநிலத்தில் 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி,அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மொத்தம் 207-பள்ளி மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினர் இதில் 57-அரசு பள்ளி மாணவர், மாணவிகள் தேர்வு எழுதினர் இதில் 20-அரசு பள்ளி மாணவர், மாணவிகள், 100-சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *