தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதை வரவேற்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கோட்டூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு, பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டெல்டா விவசாயிகள் மன்ற தலைவர் கண்ணன் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 3500 கரும்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ 4500 தருவதாகவும் . விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வதாகவும் விஜய் தெரிவித்து இருக்கிறார் சிறு விவசாயிகளுக்கு முழுமையாகவும் பெறும் விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.

வரும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகிறோம்.

தமிழக முதல்வர் விஜய் சொல்லி இருக்கும் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றினால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விஜய்யை ஒரு மனதாக ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *