தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் பட்டப் படிப்பிற்க்கு அப்பால் எதிர்காலத்தை உருவாக்கும் மனித திறன்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் கல்லூரி இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா கல்லூரி துணை முதல்வர் டாக்டர் வி வாணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
கணினி அறிவியல் துறை தலைவர் எம்.பாபி அனைவரையும் வரவேற்றுப் பேசினார் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் முன்னாள் மாணவியும் மற்றும் United Arap Emrates Wise indian Academy சிறப்புக் கல்வி ஆசிரியர் ஆஷாதேவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகள் தங்களின் தனிப்பட்ட திறமைகளை எவ்வாறு வளர்ப்பது நேர மேலாண்மை மற்றும் தலைமைத்துவம் பற்றியும் குழுக்களாகவும் மகிழ்ச்சியாகவும் எவ்வாறு வேலை பார்ப்பது என்பது பற்றியும் மனிதத் திறமைகளே எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன என்று மாணவிகளுக்கு புரியுமாறு நல்ல பயனுள்ள கருத்துக்களை பேசினார்
மேலும் மனித திறமைகள் குறித்து விளக்க காட்சி மற்றும் விளையாட்டுகள் மூலம் விளக்கப்பட்டு சிறந்த முறையில் பதில் அளித்த மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர் இந்த சர்வதேச கருத்தரங்கில் கணினி அறிவியல் துறை சார்ந்த மாணவிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி எம்.ஆஷிபா நன்றி கூறினார்