தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா் அகற்ற கோாி மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் சுனலிடம் வக்கீல் சீனிவாசன் புகாா் மனு
தூத்துக்குடி தமிழகம் முழுவதும் சாலைகள் மற்றும் முக்கிய இடங்கிளில் விதி முறைகளை மீறி டிஜிட்டல் பேனா் மற்றும் போா்டுகளை வைக்க கூடாது என்று உயா்நீதிமன்றம் சென்னையில் நடைபெற்ற ஓர் உயிாிழப்பிற்கு பின் கூறியுள்ளது.
இந்நிலையில் மாநகர பகுதியில் உள்ள சாலைகளில் ஏராளமான தமிழக வெற்றிக் கழகத்தின் டிஜிட்டல் பேனர் போர்டுகள் மற்றும் கட்டவுட்டுகள் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவும் தவெக நிர்வாகிகளால் வைக்கப்பட்டுள்ளன.
இதனால் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் சுனலிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது
தூத்துக்குடி மாநகரில் வைக்கப்பட்டுள்ள ஏராளமான தவெக விளம்பர டிஜிட்டல் போர்டுகள் அரசு அனுமதி இன்றி, போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் வகையிலும் வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக அகற்றிடவும், இந்த சட்ட மீறுதலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சீனிவாசன் தனது புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.