தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேக் தலைமையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப் இன்ஸ்பெக்டர் துறை பாபு முன்னிலையில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பொள்ளாச்சி ரோடு தனியார் நூல் மில் அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது சட்டவிரோதமாக வட மாநில நபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். நின்று கொண்டிருந்த நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம் பர்வேஸ் வயது 21 என்பதும் தெரியவந்தது.
அவர் தற்போது பொள்ளாச்சி அருகே ஆலம்பாளையம் பகுதியில் தங்கி இருந்து கொண்டு தாராபுரம் பகுதிக்கு வந்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வடமாநில தொழிலாளரை கைது செய்தனர் அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.