நாகப்பட்டினம்,மே.19-
திருமருகல் துணை தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்னையில் ஓலைகளின் அடிப்பக்கத்தில் சுருள் வடிவத்தில் வெள்ளை ஈ தாக்கம் காணப்படும்.

வளர்ச்சி அடைந்த ரூகோஸ் வெள்ளை ஈக்களை மஞ்சள் நிறம் கவரும் தன்மை உடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாளில் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகளை ஆங்காங்கே தொங்க வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். பூச்சிகளின் வளர்ச்சியை தடுக்க இலை மட்டத்தில் இலைகளில் உள்ள ஓலையின் அடிப்புறத்தில் நன்கு படும் படி தண்ணீர் தெளிக்க வேண்டும்.

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்ப எண்ணெய்யை தென்னை ஓலையின் அடிப்புறத்தில் தெளிக்க வேண்டும். கரும்பூசாணத்தை நிவர்த்தி செய்ய மைதா மாவு கரைசலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் கரைத்து இந்த பசையை ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *